News February 1, 2025

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்

image

சென்னையில் உதவி கேட்ட 13 வயது மாணவிக்கு போலீஸ் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கம் அருகே மாணவிக்கு உதவி செய்வதாக கூறி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்லாமல் போலீஸ் பூத்துக்குள் வைத்து தொல்லை கொடுத்துள்ளார். அதன்பின், வீட்டில் விடுவதாக சொல்லி பைக்கிலும் தொல்லை கொடுத்துள்ளார். அவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Similar News

News March 11, 2026

உடனே நடவடிக்கை: ஐகோர்ட் வார்னிங்

image

தமிழகத்தில் அரசு உத்தரவுக்கு விரோதமாக ஆர்டர்லி நடைமுறை பின்பற்றுவதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி முறை ஒழிக்கப்படுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், இதை அமல்படுத்தவில்லை என்றால் அதிகாரிகள் மீது பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News March 11, 2026

6 வருடங்களுக்கு முன்.. இன்று என்ன நாள் தெரியுமா?

image

2020-ல் இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.

News March 11, 2026

கேஸ் இல்லாமல் இந்த காலை உணவை செய்யலாம்!

image

சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் இச்சூழ்நிலையில் எரிவாயுவை சேமிப்பது நல்லது. அடுப்பை பற்றவைக்காமலேயே நீங்கள் உணவை தயாரிக்க முடியும். அதன்படி தோசை, பூரி, வடைக்கு பதிலாக, சாலட்டுகள், சாண்ட்விச்கள், முளைகட்டிய உணவுகள், பழங்கள், ரொட்டி-ஜாம் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை காலை உணவாக சாப்பிடலாம். இவை உங்கள் சிலிண்டரை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் காப்பாற்றக்கூடிய உணவுகளே. SHARE IT.

error: Content is protected !!