News February 1, 2025

ரூ.1 லட்சம் வரி: வரிவசூலா் சஸ்பெண்ட்

image

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை 8வது வீதியை சேர்ந்த பழனிசாமி (76) ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். ட்ரோன் சர்வே செய்து வரி சீராய்வு செய்ததால் ஒரு ஆண்டுக்கு ரூ.1,05,464 செலுத்த வேண்டும் என மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டதால் பழனிசாமி அதிர்ச்சியடைந்தார். இந்த செய்தி பரவவே கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வரிவசூலர் ஜெய் கிருஷ்ணனை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Similar News

News March 1, 2026

12-ம் வகுப்பு தேர்வு: 300 பறக்கும் படை அலுவலர்கள்

image

கோவை மாவட்டத்தில் 365 பள்ளிகளைச் சேர்ந்த 35,712 மாணவ, மாணவிகள் நாளை (மார்ச் 2) முதல் 26-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தவிர்க்க 300 பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் 130 துறை கண்காணிப்பாளர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News March 1, 2026

“மாசாணியம்மன் எக்ஸ்பிரஸ்” பெயர் கோரி மனு

image

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட பொள்ளாச்சி ரயில் நிலையத்தை நரேந்திர மோடி மதுரையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவிடம், பாலக்காடு–சென்னை ரயிலுக்கு “மாசாணியம்மன் எக்ஸ்பிரஸ்” என பெயரிட கோரி, ஆனைமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் கோரிக்கை மனு வழங்கினர்.

News March 1, 2026

கோவை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கோவை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0422-2220351 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

error: Content is protected !!