News February 1, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை ₹61,960க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், தற்போது ₹360 உயர்ந்து ₹62,320க்கு விற்பனையாகிறது. பட்ஜெட் எதிரொலியால் தங்கத்தின் விலை ₹62,000ஐ கடந்து உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ₹45 உயர்ந்து, ₹7,790க்கு விற்கப்படுகிறது.

Similar News

News March 14, 2026

இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்… அரசு அறிவிப்பு

image

தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. காலை 10 – மதியம் 1 மணி வரை வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் போட்டோவையும் மாற்றிக் கொள்ளலாம்.

News March 14, 2026

விடாப்பிடியில் பாஜக.. என்ன செய்யப் போகிறார் EPS?

image

NDA கூட்டணி ஆட்சி கிடையாது, அதிமுகவே ஆட்சியில் அமர வேண்டும் என்ற கருத்தில் EPS விடாப்பிடியாக உள்ளாராம். இதற்கு குறைந்தது 160 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அதிக தொகுதிகளை கேட்கும் பாஜக, அத்தொகுதிகளை தாங்களே பிற கட்சிகளுக்கு பிரித்தளிக்கிறோம் என்றும் கூறுகிறதாம். இது EPS-க்கு பிடிக்காததால் தான் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாம்.

News March 14, 2026

தேமுதிகவால் விசிகவுக்கு வந்த சிக்கல்

image

தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க நினைப்பதால், ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இதற்கு இருகட்சிகளும் இசைவு கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், திருமாவளவன் கேட்ட 10 தொகுதிகளில் 5 சீட் மட்டுமே கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதால், விசிகவினர் அதிருப்தியில் உள்ளனராம்.

error: Content is protected !!