News February 1, 2025
மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர்க்கு மரியாதை

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு வருடங்களாக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் அவர்கள் பணி உயர்வு பெற்று மாவட்டத்தில் இருந்து விடை பெற இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் நமது மனிதம் காப்போம் சார்பாக மாலை 3 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை செலுத்த உள்ளார்கள். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News March 6, 2026
விழுப்புரம்: சனி தோஷம் நீக்கும் கல்பட்டு சனி பகவான்!

சனி தோஷத்தை நீக்கும் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில். இங்கு சனி பகவான் 21 அடி உயரத்தில் வலது காலை காகத்தின் மீது வைத்து காட்சி தருகிறார். ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News March 6, 2026
விழுப்புரம்: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

விழுப்புரம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*
News March 6, 2026
பள்ளி மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை ஆட்சியர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ்,பள்ளி மாணவிகளுக்கு இரத்த பரிசோதனை நடைபெற்றது. இதை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி முன்னிலையில் இன்று (மார்ச்.06) பார்வையிட்டார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சா.செந்தில்குமார் உட்பட பலர் இருந்தனர்.


