News February 1, 2025

ஏலச்சீட்டு மோசடி: கணவன், மனைவிக்கு சிறை

image

ஆவடி, பாரதிதாசன் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஹெலன் (40). இவரிடம் செல்வி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருவதாக கூறி கடந்தாண்டு முதல் ரூ.3 லட்சம் வரை வாங்கி விட்டு பணத்தை திருப்பி தராமல் தலைமறைவானார். இதுகுறித்து ஹெலன் அளித்த புகாரின் பேரில், ஆவடி போலீசார் பண மோசடி செய்த ஜெகதீஸ்வரராவ் (42) மற்றும் அவரது மனைவி செல்வி (35) இருவரையும் நேற்று முன்தினம் (ஜன.30) கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News

News September 1, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 1, 2025

திருவள்ளூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 29595450 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் நிறைவு நாளில் பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News September 1, 2025

திருவள்ளூர்: சென்னைக்கே தண்ணி தரும் நம்ம ஊரு

image

திருவள்ளூர், சென்னையின் முக்கிய நீராதரமாக உள்ளது கொசஸ்தலை ஆறு. இதில் சாலா, துண்டு மீன், அலாத்தி, சீடை மீன், மது கெண்ட, கெளுத்தி, இரு கெளுத்தி போன்ற வகை மீன்கள் கிடைக்கின்றன. இதனால் இந்த ஆறு சுமார் 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.3757 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த ஆறு அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை விட இரண்டு மடங்கு அதிக நீர் பிடிப்பை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!