News February 1, 2025

மத்திய பட்ஜெட்டில் துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு

image

மத்திய பட்ஜெட்டில் போக்குவரத்து, பாதுகாப்புத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு – ₹4.91 லட்சம் கோடி, போக்குவரத்து – ₹5.48 லட்சம் கோடி, வேளாண் – ₹1.71 லட்சம் கோடி, கல்வி – ₹1.28 லட்சம் கோடி, சுகாதாரம் – ₹98,311 கோடி, உள்துறை – ₹2.33 லட்சம் கோடி, ஊரக வளர்ச்சி – ₹2.66 லட்சம் கோடி, நகர்ப்புற வளர்ச்சி – ₹96,777 கோடி, சமூக நலன் – ₹60,052 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

நாகை: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க!

News March 13, 2026

செங்கை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

தவெக கூட்டணி முடிவில் திடீர் மாற்றமா?

image

NDA-வில் தவெக இணைய வாய்ப்பிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உரிய அங்கீகாரம் கிடைத்தால் NDA கூட்டணியில் சேர பெரும்பாலான <<19372536>>மா.செ.,க்கள் பச்சைக் கொடி<<>> காட்டியுள்ளனராம். இதனையடுத்து, விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் பாஜக தலைமையிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. NDA-வில் தவெகவுக்கு 45 சீட் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!