News February 1, 2025

EX தலைமைத் தேர்தல் ஆணையர் காலமானார்

image

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) நவீன் சாவ்லா (79) காலமானார். 2005 முதல் 2009ஆம் ஆண்டு வரை இந்திய தேர்தல் ஆணையராக அவர் பதவி வகித்துள்ளார். 2009 ஏப்- 2010 ஜூலை வரை தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்தார். அண்மையில் டெல்லி தனியார் ஹாஸ்பிட்டலில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இன்று மாலை இறுதிசடங்கு நடக்கிறது.

Similar News

News March 10, 2026

சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுங்க: EPS

image

உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று மத்திய அரசை EPS வலியுறுத்தியுள்ளார். அதேபோல், மக்களிடையே தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, TN-ல் உணவகங்கள் இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள், சலுகைகளை மாநில அரசு செய்து தரவும் வலியுறுத்தினார். மேலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை முழுவீச்சில் இயங்க வைக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 10, 2026

❤️ 64 அபார்ட்மெண்ட்களை கொடுத்து உதவிய தொழிலதிபர்

image

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார். ஹோட்டல் முன்பதிவுகள் முடிந்ததால் தங்க இடமின்றி தவித்த 125 பயணிகளுக்கு தனது 64 அபார்ட்மெண்ட்களை ஒதுக்கியுள்ளார். அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கியுள்ளார். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

News March 10, 2026

OPS தனது முடிவை மாற்றினார்.. மீண்டும் ஜெயலலிதா போட்டோ!

image

OPS, திமுகவில் இணைந்தவுடன் வீட்டிலிருந்து அகற்றிய ஜெயலலிதாவின் போட்டோவை மீண்டும் வைத்துள்ளார். OPS, திமுகவில் இணைந்ததால் அப்செட்டில் உள்ள இளைய மகன் ஜெயபிரதீப், OPS-யிடம் பேசாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், உடனடியாக ஜெயலலிதாவின் போட்டோவை அகற்றியது இணையத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதனால், OPS தனது முடிவை மாற்றி ஸ்டாலின் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களை வைத்துள்ளார்.

error: Content is protected !!