News February 1, 2025

இந்திய பட்ஜெட்டா? பிஹார் பட்ஜெட்டா?

image

இந்த பட்ஜெட்டில் பிஹார் மீதுதான் நிதியமைச்சரின் பார்வை சென்றுள்ளது. *பாட்னா IIT-யை விரிவுப்படுத்துவது *தேசிய உணவு தொழில்நுட்ப அமையம் அமைப்பது *பிஹார் விவசாயிகளுக்கு திறன் மேம்பாடு, பயிர் ஊக்குவிப்பு திட்டங்கள் *மிதிலா பகுதியில் 50000 ஹெக்டேர் விளைநிலங்களுக்கு உதவி *கிரீன் ஃபீல்ட் விமான நிலையங்கள் *பித்தாவில் பிரவுன்ஃபீல்ட் விமானநிலையம் உள்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Similar News

News March 6, 2026

சர்ச்சைக்கு மத்தியில் விஜய் அறிவித்தார்

image

மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நாளை மகளிர் தின விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, மகளிருக்கான திட்டங்கள் குறித்து அவர் அறிவிக்க உள்ளார். QR அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என தவெக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் விவாகரத்து வழக்கு சர்ச்சைக்கு மத்தியில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News March 6, 2026

போரில் ஈரானுக்கு உளவுத் தகவல்களை பகிரும் ரஷ்யா!

image

போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்வதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ரேடார்கள் பற்றிய உளவுத் தகவல்களை ரஷ்யா வழங்கி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும் ரஷ்யா உதவுவதாகக் தெரிகிறது.

News March 6, 2026

சிறுமியிடம் டிரம்ப் பாலியல் அத்துமீறலா?

image

எப்ஸ்டீன் வழக்கில் காணாமல் போன 16 பக்க ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 1983-ம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் FBI-யிடம் தெரிவித்துள்ளார். தான் தடுத்தபோது டிரம்ப் தன்னை தாக்கியதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த பதிவுகள் இத்தனை ஆண்டுகளாக ஏன் மறைக்கப்பட்டன என்ற கேள்வி US அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!