News February 1, 2025
பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருந்த மத்திய பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகிறார். இதனை முன்னிட்டு, இந்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் பற்றி விவாதம் நடத்திய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, தற்போது அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Similar News
News March 1, 2026
ஜெயலலிதா படத்தை மாற்றியது ஏன்? OPS பதில்

திமுகவில் இணைந்த OPS தனது காரில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் போட்டோவை எடுத்துவிட்டு ஸ்டாலின் படத்தை வைத்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என சொன்னவர் பதவிக்காக இப்போது அவரை மறந்துவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது. தற்போது திமுகவில் இணைந்திருப்பதால் ஸ்டாலினின் படத்தை வைப்பதில் தவறில்லை என பதில் அளித்துள்ளார்.
News March 1, 2026
அஜித் பவார் மரணம்.. திடுக்கிடும் தகவல்

<<18987395>>அஜித் பவார்<<>> மரணத்திற்கு விமானியின் அலட்சியமே காரணம் என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. விமானம் தரையிறங்க குறைந்தபட்சம் 5,000 மீட்டர் பார்வைத்திறன் அவசியம்; ஆனால் 3,000 மீட்டர் மட்டுமே தெரிந்தபோதும் விமானத்தை தரையிறக்க முயன்றதே விபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானி ‘அய்யோ.. அய்யோ..’ என அலறிய சத்தம் கருப்புப் பெட்டியில் பதிவாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
இன்னும் 1000 இடங்களில் தாக்குதல் நடக்கும்: இஸ்ரேல்

ஈரானில் வரும் நாள்களில் ஆயிரக்கணக்கான இலக்குகளை தாக்குவோம் என இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் துணிச்சலான மக்கள் கொடுங்கோல் ஆட்சியின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான சூழலை இஸ்ரேல் உருவாக்கும் என கூறியுள்ளார். ஈரான் குடிமக்களே, இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்; இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்.


