News February 1, 2025
கும்பமேளா பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பலியானோர் எண்ணிக்கை 48ஆக உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தகவல்களின்படி, அந்த எண்ணிக்கை மேலும் 18 அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 3, 2026
புதுகை: அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தனியார் மஹாலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் சிவ.வி. மெய்யநாதன் மற்றும் திருமயம் தொகுதி வேட்பாளர் S. ரகுபதி பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில்,‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று, பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
News April 3, 2026
60% இருக்கைகள் ஃப்ரீ.. திரும்ப பெற்ற மத்திய அரசு!

விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய <<19414079>>தனிக் கட்டணம்<<>> வசூலிக்கக்கூடாது என 3 வாரங்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. எண்ணெய் தட்டுப்பாட்டால் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு முறையீட்டின் பேரில், மறு உத்தரவு வரும் வாபஸ் பெறப்படுவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News April 3, 2026
இந்திய மருந்துகளுக்கு 100% வரி… டிரம்ப் அறிவிப்பு

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Patented மருந்துகளுக்கு ஜூலை 31 முதல் 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து Generic மருந்துகளே USA-வுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதால் தற்போதைக்கு பாதிப்பு குறைவே. ஆனால், USA-வுக்கு உற்பத்தியை மாற்றாத நிறுவனங்களின் ஜெனரிக் மருந்துகளுக்கும் விரைவில் வரி உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.


