News March 27, 2024
மொத்தம் 1403 வேட்பாளர்கள் மனுதாக்கல்

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்நாட்டில் மட்டும் 1403 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்தத் தகவலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 1403 வேட்பாளர்களிடம் இருந்து மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாளை பரிசீலனை முடிந்த பின்னர் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுவிடுவர்.
Similar News
News September 1, 2025
IND Vs AUS: அனைத்து வீரர்களுக்கும் பாஸ்

இந்திய அணி, ஆஸி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வீரர்களுக்கான உடற்தகுதி சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன. ரோஹித் சர்மா, சுப்மன் கில், பும்ரா உள்பட இப்பரிசோதனையில் பங்கேற்ற அனைவரும் பாசிட்டிவ் ரிசல்ட் பெற்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். அக்.19-ல் தொடங்கும் இத்தொடரில் 3 ODI மற்றும் 5 T20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இவை நவ.8-ல் நிறைவு பெறுகின்றன.
News September 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 1, 2025
தெலுங்கில் ₹1,000 கோடி வசூலுக்கு இதுவே காரணம்: SK

கதை நன்றாக இருந்தால், அப்படத்தை எவ்வளவு செலவு செய்தும் தயாரிக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் எப்போதும் தயாராக இருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். ஹைதரபாத்தில் நடைபெற்ற ‘மதராஸி’ பட புரமோஷனில் பேசிய அவர், இதன் காரணமாகவே தெலுங்கு திரையுலகில் ₹1,000 கோடி படங்கள் அடிக்கடி வருவதாக தெரிவித்துள்ளார். ‘அமரன்’ படத்தை வரவேற்றது போல், இப்படத்தையும் தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பர் என நம்புவதாகவும் கூறினார்.