News March 27, 2024
பண மழையில் நனையப் போகும் ராசிகள்

நவ கிரகங்களில் மங்கள நாயகனான குரு பகவன் திகட்ட திகட்ட செல்வ செழிப்புகளை வழங்குவார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு, ஏப்ரல் 1 முதல் ரிஷப ராசிக்கு இடம் பெயர்வதால் மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் ராசியினருக்கு பண வரவு அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம், புதிய தொழிலில் அடியெடுத்து வைக்கும் யோகம், கொடுக்கல் வாங்கலில் சிக்கல் விலகுவது என பல்வேறு சுப பலன்களை இவர்கள் அனுபவிக்க உள்ளனர்.
Similar News
News August 20, 2025
தவெக மாநாட்டிற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்

தவெக மாநாட்டிற்கு நாற்காலிகள் போட பேசப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. நிகழ்விற்காக 1.5 லட்சம் இருக்கைகள் போட 5 நபர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், 4 பேர் மறுத்துவிட்டதால் கேரளாவிலிருந்து நாற்காலிகளை இறக்கியுள்ளனர். ஒப்பந்ததாரர்களுக்கு அரசியல் அழுத்தம் தரப்பட்டது தான் இதற்கு காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
News August 20, 2025
திமுகவில் இணையும் மல்லை சத்யா?

துரை வைகோ உடனான மோதலைத் தொடர்ந்து, மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நீக்கி வைகோ உத்தரவிட்டுள்ளார். பெரியார், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சத்யா, உட்கட்சி மோதல் வெடித்தபோதும், வைகோவை ‘தலைவர்’! என்றே குறிப்பிட்டு வந்தார். தற்போது கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளதால், அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
News August 20, 2025
கூலி படத்தில் 4 நிமிட காட்சிகள் நீக்கம்

கூலி படத்திலிருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் கூலி திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு இருக்கிறது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் படத்தில் இருந்து கட் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சிங்கப்பூரில் பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்க தணிக்கை சான்றிதழ் தரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் U/A சான்று கேட்டு தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. U/A கிடைக்குமா ?