News February 1, 2025
மாமல்லபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருமண விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு, மாமல்லபுரம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பேரனுக்கு மாமல்லபுரத்தில் உள்ள கால்டன் சமுத்ரா கடற்கரை விடுதியில் இன்று (பிப்.1) காலை 12:45 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
Similar News
News March 11, 2026
செங்கை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News March 11, 2026
FLASH: ’திமுகவால் தமிழகம் சீரழிந்துள்ளது!’ – அன்புமணி

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ”பெண்கள், குழந்தைகள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு சீரழிந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ” போக்சோ குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் முதலமைச்சரின் செவிகளை எட்டவில்லையா?” என பாஜக தலைவர் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 11, 2026
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – 2 பேர் கைது!

மதுராந்தகம் அருகே மார்ச்.9ம் தேதி இரவு சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளில் ஒரு குற்றவாளி நேற்று (மார்ச். 10) கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான மாரிபுத்தூர் கிராமத்தை சேர்ந்த தாமோதர பெருமாள் (25) என்பவர் இன்று (மார்ச். 11) கைது செய்யப்பட்டுள்ளார்.


