News February 1, 2025

நாகை: எச்சரிக்கை பலகையில் மோதி விபத்து

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி பிரதான சாலையில் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த சிவக்குமார் என்பவர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த விபத்து எச்சரிக்கை பலகையில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 30, 2025

நாகை: ரூ.20 லட்சம் அரசு மானியம்

image

நாகை மாவட்டத்தில் கிறித்துவ மகளிர் நலனுக்காக, ஆட்சியர் தலைமையில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கம் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூ.20.00 லட்சம் வரை அரசால் இணை மானியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் வழங்கப்படுகிறது. இந்நிதியிலிருந்து ஏழ்மையில் உள்ள மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

நாகை: சிறுபான்மையினருக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் மக்கள் (கிறித்துவ. இசுலாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயினர்) ஆகியோருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அவர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

நாகை: முக்கிய காவல்துறை அதிகாரிகளின் எண்கள்

image

நாகை மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய காவல்துறை அதிகாரிகளின் எண்கள்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 8825882175 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – 9488546474 , நாகை டி.எஸ்.பி – 9498163851, வேதாரண்யம் டி.எஸ்.பி – 9498163518, மாவட்ட குற்ற பிரிவு – 9994221234, மாவட்ட மதுவிலக்கு அமாலக்கப் பிரிவு – 9787232400. மறக்காமல் உங்கள் நண்பர்கள் மட்டும் உறவினர்களுக்கும் SHARE செய்யவுங்கள்.

error: Content is protected !!