News February 1, 2025
பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்குப் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வரி விகிதத்தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதோடு புதிதாக 2 வரி பிரிவுகள் சேர்க்கப்படவுள்ளதாம். சிறு,குறு விவசாயிகளுக்கான உதவித்தொகை ₹12,000ஆகவும், எரிபொருள் மீதான கலால் வரி, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்படவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
Similar News
News March 16, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி உத்தரவு

கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, முதலில் Aadhar FaceRD செயலியை டவுன்லோடு செய்யுங்கள். பின் நீங்கள் எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து KYC பணிகளை முடியுங்கள். SHARE IT
News March 16, 2026
பும்ராவின் திருமண நாள் வாழ்த்தை கலாய்த்த மனைவி

திருமண நாள், மனைவியின் பிறந்தநாள் போன்றவை சில ஆண்களுக்கு எப்போதுமே பிரச்னையாக மாறிவிடுகிறது. அதில் பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. இந்திய அணி வீரர் பும்ரா, 5-வது திருமண ஆண்டையொட்டி தனது மனைவிக்கு இதய எமோஜியுடன் ’Happy anniversary’ என்று மட்டும் இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு அவரது மனைவி சஞ்சனா கணேசன், ‘கிட்னியை தொட்ட வரிகள்’ என கமெண்ட் செய்து பும்ராவை கலாய்த்துள்ளார்.
News March 16, 2026
வங்கி கணக்கில் ₹12,000.. தமிழக அரசு கொடுத்த GOOD NEWS

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் படிப்புதவித் திட்ட தேர்வு(NMMS) ஜன.10 -ல் நடைபெற்றது. இதில், தேர்வானவர்களின் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் Other Examination பகுதியில் சென்று பட்டியலை காணலாம். தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு *₹48,000 உதவித்தொகை வழங்கப்படும்.


