News February 1, 2025

உரிமம் இல்லாமல் விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் நெல் அறுவடையை தொடர்ந்து உளுந்து, பச்சை பயிறு, பருத்தி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மேற்கண்ட பயிர்களுக்கு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News March 5, 2026

விருதுநகர் : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

விருதுநகர் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 5, 2026

விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 5, 2026

விருதுநகர்: 126 ஆட்டு கிடா, 260 சேவல் பலியிட்டு நேர்த்தி கடன்

image

விருதுநகர் அருகே உள்ள வள்ளியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை மற்றும் அன்னதான பூஜை, 36ம் ஆண்டு பூஜை நடைபெற்றது. இந்த பௌர்ணமி பூஜையில் தமிழகத்தில் உள்ள பக்தர்கள் நேர்த்திக்கடனாக 126 ஆட்டுக்கடாய், 260 சேவல் பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

error: Content is protected !!