News February 1, 2025

தூத்துக்குடி அருகே சிறுவன் தலைநசுங்கி மரணம்

image

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே அயிரவன்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் செல்லத்துரை என்பவரின் மகன் சுரேந்திரன் (4) தலைநசுங்கி சம்பவ பலியானான். சித்தப்பா கார்த்திக் என்பவரின் மோட்டார் சைக்கிளில் சென்று போது விபத்து நடந்துள்ளது. தகவலறிந்து வந்த கடம்பூர் போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News

News March 3, 2026

தூத்துக்குடி: 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.

News March 3, 2026

குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.

News March 2, 2026

BREAKING சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு விசாரணைக்காக காவல் துறையால் அழைத்துச் சென்ற போது காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 5 ஆண்டுக்கு மேலாக நடக்கு இந்தவழக்கில் மார்ச்.23 அன்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்க உள்ளார்.

error: Content is protected !!