News February 1, 2025
மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளர் உயிரிழப்பு

வானூா் வட்டம், நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் அதேபகுதியில் உணவகம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஜன.31) மாவு அரைப்பதற்காக வீட்டிலிருந்த கிரைண்டரை அவர் போட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வானூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
Similar News
News March 9, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(08) இரவு 10 மணி முதல் மார்ச்- (09)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
News March 8, 2026
விழுப்புரம்: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க!

விழுப்புரம் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News March 8, 2026
ஆட்சியர் பெருந்திட்ட வளாக பூங்காவில் பூமி பூஜை!

இன்று (மார்ச்.8) விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்டவளாக பூங்காவில், கூடுதல் நடைபாதை மற்றும் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில், விழுப்புரம் எம்எல்ஏ இரா.இலட்சுமணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


