News February 1, 2025
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா சீனியர் சிபிஎஸ்சி பள்ளியில் பிப்.2ல் மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளங்கலை, முதுகலை B.ed, M.ed, M.phil, BE, ME, B.Tech, M.Tech முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள்.
Similar News
News March 4, 2026
மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே சடலம் மீட்பு

மதுரை டவுன் ரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள நகர பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க விலாசம் தெரியாத வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் குறித்து விசாரணைசெய்து வருகின்றனர்.
News March 3, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (03.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 3, 2026
மதுரை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


