News February 1, 2025
ரோட்டர்டாம் விழாவில் ‘பறந்து போ’

பறந்து போ திரைப்படம், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்தப் படத்தின் இயக்குநர் ராம் கூறும்போது, பேரன்பு, ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படம் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மிர்ச்சி சிவா, க்ரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
Similar News
News March 5, 2026
ராசி பலன்கள் (05.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 5, 2026
ஈரான்-அமெரிக்கா போர்.. கிம் ஜாங் உன் மீம்ஸ்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, வட கொரிய கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை வைத்து மீம்ஸ் பரவி வருகின்றன. ஏவுகணை சோதனைகளுக்கு பெயர் பெற்ற கிம், போருக்கு யாரும் அழைக்கவில்லை என்று வருத்தப்படுவது போன்றும், ஆயுதங்களுடன் காத்திருப்பது போன்றும் பல்வேறு மீம்கள் வலம் வருகின்றன. அதில் சிலவற்றை மேலே பகிர்ந்துள்ளோம். SWIPE & SHARE.
News March 5, 2026
தம்பதியரே, இதை கவனியுங்கள்

நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு, வீடு பராமரிப்புக்கு, குடும்பத்தினர், நண்பர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? இந்த நேரத்தை, நீங்கள் உங்கள் கணவன் (அ) மனைவியுடன் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுங்கள். சமநிலையில் உள்ளதா? இல்லையெனில், இருவரும் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை யோசியுங்கள். உங்கள் பணி வாழ்க்கையைவிட, மண வாழ்க்கை முக்கியமானது. சரி தானே?


