News February 1, 2025
ஜெய் ஷாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான தொடக்க விழாவில் பங்கேற்க, ICC தலைவர் ஜெய் ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. கடாபி மைதானத்தில், பிப்ரவரி 16ஆம் தேதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, இந்தத் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளைச் சேர்ந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்களுக்கும் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 21, 2026
வேட்பாளர்களின் சமூக வலைதள விவரங்களை கேட்கும் ECI

வேட்புமனுவில் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள (SM) கணக்கு விவரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. மேலும், டிவி, ரேடியோ, SMS, SM-களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு ஊடகச் சான்றிதழ் & தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன், தேர்தல் முடிவடைந்த 75 நாள்களுக்குள் SM உள்பட டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்ட பிரசார செலவினங்களை ஒப்படைக்க வேண்டும்.
News March 21, 2026
தவெக கூட்டணி… கடைசி நேரத்தில் மாற்றம்

TN சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது. தவெகவுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவும், ராமதாஸும் கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக புதிய கூட்டணியை உருவாக்கிவிட்டனர். இதனால், அந்த இருவரும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல், கிருஷ்ணசாமியும் அதிமுகவுடன் கூட்டணியை பேசி முடித்துவிட்டதால், தவெக வரும் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துவிட்டதாம்.
News March 21, 2026
கரூரில் ஜன நாயகன் ஷூட்டிங்கா? தவெக பதில்

கரூர் அசம்பாவிதத்தின்போது ‘ஜன நாயகன்’ பட ஷூட்டிங் எடுக்கப்பட்டதாக சில <<19420433>>வீடியோக்கள் <<>>வைரலாகி ஹாட் டாபிக்காக மாறியது. இந்நிலையில், அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு அங்கு ஷூட்டிங் நடந்ததா என்பது தெரியும் என்று CTR நிர்மல் குமார் பதிலளித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புரோக்கர்கள் ஏதாவது பேசுவார்கள் என்ற அவர், இந்த விஷயத்தை தாங்கள் அரசியலாக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.


