News February 1, 2025

தொடரை வென்றது இந்தியா

image

ENGக்கு எதிரான டி20 தொடரை IND அணி வென்றது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இன்று நடந்த 4ஆவது போட்டியில், ENGஐ 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த IND அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய ENG அணி, 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது.

Similar News

News March 3, 2026

BREAKING: தங்கம் விலை ஒரேநாளில் ₹1,560 குறைந்தது

image

போர் பதற்றம் அதிகரித்த போதிலும், தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹1,560 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹80 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,480 சரிந்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹15,465-க்கும், 1 சவரன் ₹1,23,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிலோ 3.15 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

News March 3, 2026

அமித் ஷா கேட்டும் அசையாத EPS

image

ராஜ்பசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார் EPS. இதில் தொகுதி பங்கீட்டை விட ராஜ்யசபா சீட் பற்றி தான் நீண்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. குறிப்பாக கூட்டணியில் உள்ள GK வாசனுக்கு மறுபடியும் ராஜ்யசபா சீட் கொடுக்கும்படி அமித்ஷா கேட்டாராம். அதற்கு மறுப்பு தெரிவித்த EPS, அன்புமணி மற்றும் அதிமுகவே 2 சீட் என உறுதியாக கூறிவிட்டாராம்.

News March 3, 2026

விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி

image

இண்டிகோ நிறுவன விமான பணிப்பெண்ணிடம் திமுக நிர்வாகி பாலியல் ரீதியில் அத்துமீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25-ம் தேதி, சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் வைத்து 25 வயது பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் பிரபாகரனும் அவரது நண்பரும் அத்துமீறியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!