News January 31, 2025

தென்காசி மாவட்டத்தில் மின்தடை இல்லை

image

தென்காசி மாவட்டத்தில் நாளை (பிப்.,1) பராமரிப்பு பணி காரணமாக தென்காசி, கடையம், சுரண்டை, சாம்பவர் வடகரை, புளியங்குடி, செங்கோட்டை, கீழப்பாவூர், ஊத்துமலை, சங்கரன்கோவில் டவுண், ஆலங்குளம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே நாளை வழக்கம் போல் மின்விநியோகம் நடைபெறும். *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிர்ந்து தெரிய படுத்தவும்*

Similar News

News March 4, 2026

செங்கோட்டை – நெல்லை ரயில் தற்காலிக ரத்து

image

இன்று மார்ச் 4 ம் தேதி மற்றும் 6 ம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில், சேரன்மகாதேவியில் நிறுத்தப்படும். நெல்லையிலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும் நெல்லை – சேரன்மகாதேவி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News March 4, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டம் (தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம் கொடுக்கபட்டுள்ளது.

News March 3, 2026

தென்காசி : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

தென்காசி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!