News January 31, 2025
24 மணி நேரமும் டீக்கடைகள் செயல்படலாம்

தமிழகத்தில் டீக்கடைகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த பஷீர் தாக்கல் செய்திருந்த மனுவில், போலீசார் 11 மணிக்கு டீக்கடைகளை மூட சொல்லி வற்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, 24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம் என்று அரசாணை இருக்கும்போது ஏன் மூட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News March 24, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 24, பங்குனி 10 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News March 24, 2026
கோடை வந்தாச்சு.. இதோ சில டிப்ஸ்!

➤கோடையில் சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளில் தப்பிக்க நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ➤உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுவது அவசியம். ➤இரவில் பனங்கற்கண்டு கலந்து பால் அருந்தினால் உடல் சூடு தணியும். ➤பகலில் கொத்தமல்லித் தழையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். ➤கண்களின் நலனுக்கு பப்பாளி பழம் சாப்பிடலாம்.
News March 24, 2026
சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5% சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னை – கன்னியாகுமரி, திருச்சி – சேலம், சேலம் – கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச் சாவடிகளில் இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. ஏற்கெனவே போர் சூழலால் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


