News January 31, 2025

சேலம் GH ஊசியால் பறிபோன உயிர்?

image

சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 11 மணியளவில் பணியில் இருந்த மருத்துவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மருந்து செலுத்திய 6 நோயாளிகளின் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு நோயாளி இறந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் மறுத்துள்ளார்.

Similar News

News March 6, 2026

சேலம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

சேலம் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

சேலம் ஓமலூர் அருகே பயங்கரம்!

image

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது இடது பக்க இடுப்பு, வலது பக்க விலா எலும்பில் மச்சம் உள்ளது. அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 6, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்டத்தில் இரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா மார்ச் 10-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. முன்னதாக மார்ச் 7-ல் ஊராட்சிகளிலும், 9-ல் வட்டாரங்களிலும், மார்ச் 9 மற்றும் 12-ல் விற்பனை கண்காட்சிகளும் நடைபெறவுள்ளது. இதில் விற்பனையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!