News March 27, 2024
பாலக்கோடு: பற்றி எரிந்த நெருப்பு

புலிகரை அருகே உள்ள கோவிலூரில் லாரி ஒன்று உயரத்தில் வைக்கோல் ஏற்றியதால் மின் கம்பியில் உரசி தீ பற்றியது. இதை அறிந்த ஓட்டுனர் வாகனத்தை வேகமாக ஒட்டி ஊரை விட்டு வெளிப்புறத்திற்கு கொண்டு சென்றார் .ஊர் பொதுமக்கள் அருகே இருந்த போர்வெல்லில் நீரை கொண்டு வந்து ஊற்றியும், மண்ணை தூவியும் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
Similar News
News December 18, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (டிச.20) சனிக்கிழமை அன்று சோகத்தூர் தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யவேண்டும் என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
தருமபுரி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

தருமபுரி மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <
News December 18, 2025
தர்மபுரி:தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட விழா மார்கழி 2 ம் தேதி முதல் 11 தேதி வரை தமிழகம் முழுவதும் தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி மூலம் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இன்று (டிச.18) காலை 11 மணியளவில் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சதீஷ் தொடக்கி வைத்தார்.


