News January 31, 2025

ராணிப்பேட்டையில் நாளை மாதிரித் தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-IV & VAO தேர்விற்கான மாதிரித் தேர்வு நாளை (01.02.2025) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் புகைப்படம்-2, ஆதார் நகலுடன் போட்டித் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News March 3, 2026

ராணிப்பேட்டையில் ஈரநிலங்கள் பாதுகாப்பு குறித்த மாவட்ட கருத்தரங்கம்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச்.03) வனத்துறை சார்பில் ஈரநிலங்கள் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டு இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

News March 3, 2026

ராணிப்பேட்டை : நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 3, 2026

ராணிப்பேட்டை : தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!