News March 27, 2024

IPL: 277 ரன்கள் குவித்த SRH

image

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 277/3 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற RCBயின் சாதனையை (263) SRH முறியடித்துள்ளது. இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் ஷர்மா 63, க்ளாஸான் 80, மார்க்ரம் 42 ரன்கள் குவித்தனர். இன்று 78 ரன்கள் குவித்த க்ளாஸான், நடப்பு ஐபிஎல் ரன்களுடன் (143) ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார்.

Similar News

News February 20, 2026

இனி CIBIL ஸ்கோர் தேவையில்லை!

image

CIBIL ஸ்கோர் காரணமாக வங்கிகளில் புதிதாக லோனுக்கு விண்ணப்பிப்பவர்கள் கடன் வாங்குவது என்பது பெரும் போராட்டமாக உள்ளது. இந்நிலையில் AI அடிப்படையிலான கடன் மதிப்பெண் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் பெண்கள், சுய உதவிக்குழுக்கள், சிறு வணிகர்கள் & கிராம மக்களும் எளிதாக கடன் பெறலாம். வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்த முடியும் என நம்பப்படுகிறது.

News February 20, 2026

கொள்கை தலைவரை மறந்தாரா விஜய்?

image

தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதேநாளில், அஞ்சலை அம்மாளின் தியாகத்தைப் போற்றி வணங்குவதாக அவரது உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போட்டோ வெளியானது. ஆனால், இன்று விஜய்யிடம் இருந்து இதுவரை எந்த பதிவும் வரவில்லை. இதனால் கொள்கை தலைவரையே விஜய் மறந்துவிட்டாரா என அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனர்.

News February 20, 2026

BREAKING: திமுகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு கொடுத்தார்

image

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று திமுக கூட்டணிக்கு ஆதரவாக OPS பேசியுள்ளது அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CM ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்தபின் OPS செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் 5 ஆண்டுகால சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழல், ஸ்டாலினின் சிறப்பான 5 ஆண்டுகால ஆட்சி காரணமாக திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!