News January 31, 2025
காணாமல் போன சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு

தட்டப்பாறை கிராமம் ஏரியின்கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி என்பவரின் 3வயது மகள் ஜெயப்பிரியா நேற்று முன்தினம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின்பேரில், காணாமல் போன குழந்தையை, டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று சிறுமி, வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
Similar News
News March 4, 2026
வேலூரில் கருத்து கேட்ட திமுகவினர்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், வியாபார சங்கத்தினர் தங்களுக்கு தேவையான கோரிக்கை மனுவை தேர்தல் தயாரிப்பு குழுவிடம் அளித்தனர்.
News March 4, 2026
வேலூரில் வீடே அதிர கேட்ட சத்தம்!

பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் வசித்து வருபவர் முன்னி. இவரது தாய் ஜமீலாவின் மறைவுக்காக வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் பிரிட்ஜ் வெடித்துத் தீப்பிடித்தது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும், வீட்டில் இருந்த ரூ.20,000 பணம் மற்றும் பல பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 4, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


