News January 31, 2025

தேசிய அளவில் சாதனை படைத்த கரூர் மாணவி

image

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்து ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் பரிசு தொகை ரூ 10000 பதக்கமும் பெற்று தமிழ்நாட்டிற்கும், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதிக்கும் பெருமை சேர்த்த புனித டோமினி மெட்ரிகுலேஷன் பள்ளி 9 -ம் வகுப்பு மாணவி கே.சத்யாவை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Similar News

News March 5, 2026

கரூர்: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்., இதை பண்ணுங்க

image

கரூர் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News March 5, 2026

கரூர்: தட்டித்தூக்கிய செந்தில்பாலாஜி!

image

கரூர் மாநகராட்சி, 40வது வார்டு பகுதி அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் பிரேமலதா, பிரபு மற்றும் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று (மார்ச் 04) முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்துக் கொண்டார்.

News March 5, 2026

அரவக்குறிச்சி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி!

image

அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56). இவர் தனது மகள் திவ்யபாரதி (29) உடன் மலைக்கோவிலுார் பாலம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இதே திசையில் நவீன் குமார் (26), என்பவர் வேகமாக ஒட்டி வந்த டூவீலர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் கரூர் GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!