News January 31, 2025
நாகை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6. 2 2025 வியாழன் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News March 5, 2026
தவறி விழுந்த பெயிண்டர் பரிதாப பலி

வேதாரணியம் அடுத்த தோப்புத்துறை மலாக்கா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், தோப்புத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஒரு வீட்டில் வேலை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News March 5, 2026
குடி போதையில் பூச்சி மருந்து குடித்தவர் உயிரிழப்பு

காரியாபட்டினம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கத்தரிப்புலம் கோவில் குத்தகை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் மரப்பட்டை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆனந்தராஜ் போதையில் வீட்டிற்கு வந்து சாப்பாடு சரியில்லை என கூறி தகராறு செய்துவிட்டு. வீட்டை விட்டு சென்றுள்ளார். அப்போது தனது மர பட்டறையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.
News March 4, 2026
நாகை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!


