News January 31, 2025

தவெகவில் இணையத் திட்டமா? காளியம்மாள் மறுப்பு

image

தவெகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை, நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மறுத்துள்ளார். சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தியாக உள்ள காளியம்மாள், கடந்த சில மாதங்களாக NTKவில் தீவிரமாகச் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோருடன் TVKவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 12, 2026

கிருஷ்ணகிரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

சிலிண்டர் புக்கிங் பிரச்னையா? இப்படி டிரை பண்ணுங்க!

image

கேஸ் சிலிண்டர் புக்கிங் நம்பர் வேலை செய்யவில்லை என பலரும் புகார் கூறி வருகின்றனர். இதற்கு மாற்று வழியாக CRED, Paytm போன்ற தளங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடிகிறது. இந்த செயலிகளில் உள்ள போன் நம்பரும், சிலிண்டருக்கு பதிவு செய்திருக்கும் நம்பரும் ஒன்றாக இருந்தால் எளிதாக முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்திய பின்னரே புக் ஆகும் என்பதால், முன்பதிவு ஆனதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

News March 12, 2026

BREAKING: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

image

எரிபொருள் கையிருப்பு போதுமான அளவு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளதால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் எரிபொருள் விநியோகம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசிய போர்ச்சூழலை எதிர்கொள்வோம் எனவும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!