News March 27, 2024
கடலூர்: கார்ல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவிப்பு!

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத், கடலூர், சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், திமுக மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 12, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News February 12, 2026
கடலூர்: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சேத்தியாத்தோப்பு அடுத்த பொன்னங்கோவிலை சேர்ந்தவர் செல்வமணி மகள் ஷிவாணி (16). பூதங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஷிவானி, நேற்று மாலை பெற்றோர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 12, 2026
கடலூர்: கோபத்தால் பறிபோன உயிர்..

ராமநத்தம் அடுத்த ம.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (65). இவரது பேத்தியை அதே பகுதியை சேர்ந்த தேவா என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முயன்ற சாமிக்கண்ணை, தேவா தாக்கியதில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


