News January 31, 2025
குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் 9 பேர் கைது

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான தனுஷ் (24) என்பவருக்கு அவரது ஏரியாவை சேர்ந்த இளைஞர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (ஜன.30) அந்த கும்பல் தனுஷை ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளது. முன்பகை காரணமாக தனுஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் 9 பேர் கைதாகினர்.
Similar News
News March 7, 2026
சென்னையில் நள்ளிரவில் உயர்ந்த சிலிண்டர் விலை

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 868 ரூபாயிலிருந்து 928 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்ந்த நிலையில் 928 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50க்கு விற்கப்படுகிறது.
News March 7, 2026
சென்னை: காரை திருடியவர் கைது

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சாம் எபினேசர் (29) தனது மாருதி காரை வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த மார்ச் 6ம் தேதி வேலை முடித்து வீடு திரும்பியபோது கார் இருந்ததாகவும், ஆனால் சிறிது நேரத்தில் கார் திருடப்பட்டதாகவும், புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் பேரில், GPS மூலம், காரை கண்டறிந்து, திருடிய ராகுல் (23), என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.