News March 27, 2024
முன்னாள் எம்பி வேட்பு மனு நிராகரிப்பு

திருநெல்வேலி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தொகுதி அதிகாரப்பூர்வ வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு எதிராக போட்டி வேட்பாளராக களம் இறங்க இன்று (மார்ச் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டதாக கூறி அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
Similar News
News November 3, 2025
மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.3) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 3, 2025
நெல்லையில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு; சிறுமி உயிரிழப்பு

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவம்பர் 3) நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இவ்வாறு இந்த நிமோனியா காய்ச்சலால் மூன்று வயது சிறுமியின் உயிரிழப்பு நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.
News November 3, 2025
தொந்தரவு செய்தால் நடவடிக்கை – கலெக்டர் அட்வைஸ்

ஆட்சியர் சுகுமார் இன்று அளித்த பேட்டியில், வாக்கு சாவடி அதிகாரிகள் சிறப்பு திருத்தபட்டியல் சரிபார்ப்பு பணியின் போது அரசியல் கட்சி முகவர்கள் உடன் செல்ல அனுமதி உள்ளது. அரசியல் கட்சிகளின் சந்தேகங்களை கலைய முகவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் போது தொந்தரவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


