News January 31, 2025

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) 1,124 டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் பிப்.3 முதல் <>cisfrectt.cisf.gov.in<<>> தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 3, 2026

திருவாரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

திருவாரூர் தொகுதியில் போட்டியிட எம்.எல்.ஏ விருப்ப மனு

image

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.கலைவாணன் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

News March 3, 2026

திருவாரூர் மாவட்டத்தில் 222 பேர் ஆப்சென்ட்

image

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 02) தொடங்கியது. இதற்கு 6045 மாணவர்கள் 7223 மாணவிகள் என 13268 பேர் 61 தேர்வு மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 5941 மாணவர்கள் 7105 மாணவிகள் என 13046 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தம் 222 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!