News January 31, 2025
பால்கனியில் இருந்து தவறி விழுந்து ஆபாச நடிகை பலி

பிரேசிலில் ஓட்டல் பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்து ஆபாச நடிகை ஒருவர் பலியானார். ரியோடி ஜெனிரோவில் உள்ள ஓட்டல் பால்கனியில் இணையதளம் ஒன்றிற்காக ஆபாச பட நடிகை ஆனா போலி (27) வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது கால்தவறி கீழே தலைகீழாக விழுந்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார். இதுகுறித்து அவருடன் தங்கியிருந்த 2 பேரை பிடித்து போலீஸ் விசாரித்தனர்.
Similar News
News March 12, 2026
கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

மக்களின் வாழ்க்கைமுறை, மரபணு & வானிலையை பொறுத்து சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரிக் ஆசிட் & தொற்றை ஏற்படுத்தும் ஸ்ட்ரூவைட் போன்றவையே சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும். சில பாக்டீரியா தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம். இவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. சிலருக்கு மரபணு ரீதியாகவும் சிறுநீரகத்தில் கற்கள் வருமாம்.
News March 12, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. கடைசிநேரத்தில் அறிவித்தார்

NDA கூட்டணியில் புதிய கட்சியாக முல்லை மக்கள் பேரவை இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற NDA கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் நாசே ராமச்சந்திரனும் பங்கேற்றார். இதனையடுத்து, வரும் தேர்தலில் NDA-வுக்கு முல்லை மக்கள் பேரவை ஆதரவளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸில் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த நாசே ராமச்சந்திரன், புதிய கட்சி தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2026
ஜனநாயகன் ஓடிடி உரிமம் ரத்தானதா?

சென்சார் சிக்கலால் விஜய்யின் ஜனநாயகன் ரிலீசில் தாமதம் நீடிக்கிறது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை ₹120 கோடிக்கு வாங்கிய சம்பந்தப்பட்ட நிறுவனம், ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், இதுபற்றி படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இதனிடையே, அடுத்த வாரம் ரிவைஸிங் கமிட்டி, படத்தை பார்த்து சென்சார் சான்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


