News January 31, 2025
பட்ஜெட்: ரூ.10 லட்சம் வரை வருமான வரி இல்லை?

2025 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இத்தொடரில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் – ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.15 லட்சம்- ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 25% புதிய வரி விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Similar News
News March 8, 2026
CPM-ம், பாஜகவும் ஒரே கட்சிதான்: ராகுல் காந்தி

கேரளாவில் CPM மற்றும் BJP என்பது தனித்தனி கட்சிகள் அல்ல. CJP என்ற ஒரே கட்சியாக அவை செயல்படுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸை வீழ்த்துவதே CJP கட்சியின் முக்கிய நோக்கம் என்ற அவர், CPM விவசாயிகள், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவில்லை என பேசியுள்ளார். மேலும், ட்ரம்பின் கட்டுப்பாட்டில் மோடி இருப்பதைப் போலவே, மோடியின் கட்டுப்பாட்டில் பினராயி விஜயன் உள்ளார் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 8, 2026
நாட்டின் பெண் சக்திகள்: PM மோடி மகளிர் தின வாழ்த்து!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பெண் சக்திகளுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் உறுதி, திறமை மற்றும் படைப்பாற்றலால், நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களின் சாதனைகள் நாட்டை ஊக்குவிப்பதுடன் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதிலும் பங்களிப்பதாக பாராட்டியுள்ளார்.
News March 8, 2026
BREAKING: வரும் 12-ம் தேதி தவெக போராட்டம்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய், அரசியல் ரீதியாக அடுத்தடுத்த நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி வரும் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட, மா.செ.க்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் விஜய், ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


