News January 31, 2025

திருவாரூர் பெயர் காரணம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

image

சோழர்களின் தலைநகராக விளங்கிய திருவாரூருக்கு எண்ணில் அடங்க சிறப்புகள் உண்டு. அப்படிப்பட்ட திருவாரூரின் பெயர் காரணம் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? சங்க காலத்தில் ‘ஆரூர்’, அதாவது ஆத்தி மரங்கள் நிறைந்த ஊர் என அழைக்கப்பட்ட திருவாரூர், தேவார பதிகத்தில் பாடல்பெற்ற காரணத்தால் ‘திருஆரூர்’ என பெயர் பெற்றது. இது காலப்போக்கில் மருகி ‘திருவாரூர்’ ஆனது. இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்..

Similar News

News March 2, 2026

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருவாரூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சி அல்லது உபகரணங்களுக்காக முன்பண கட்டணங்கள் கோருதல், நேர்காணல் இல்லாமல் கோரப்படாத சலுகைகள், சிறிய வேலைக்கு அதிக ஊதியம் வழங்குவதாக வாக்குறுதிகள், விரைவாக செயல்படுங்கள் போன்ற அழுத்தம் கொடுக்கும் சலுகைகளை பற்றி சந்தேகப்படுங்கள் என்றும், இது மோசடிக்காரர்களால் அனுப்பி வைக்கும் செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

News March 2, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.1) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 1, 2026

திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!