News January 31, 2025
லெஸ்பியனா? நடிகை ஆத்திரம்

கோலமாவு கோகிலாவில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் ஜாக்குலின். இதேபோல், பல படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவரது சமூகவலைதள பக்கத்தில் 3 தோழிகளுடன் வெளியிட்ட படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், நீ லெஸ்பியனா? என பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, தோழிகளுடன் இருப்பது போல படம் இருந்தால் லெஸ்பியனா? கமெண்ட் பதிவிட்டவரிடம் பைத்தியமாடா? என கேட்க தோன்றியதாக ஆத்திரத்துடன் பதிலளித்தார்.
Similar News
News March 12, 2026
விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தின் எதிரொலியால் விமானக் கட்டணம் ₹16,000 வரை அதிகரிக்க உள்ளது. இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கான கட்டண உயர்வு வரும் 18-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என அரசு கூறியுள்ள போதிலும் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
+2 மாணவி வன்கொடுமை.. கனிமொழி கொடுத்த ரியாக்சன்!

தூத்துக்குடியில் பள்ளி <<19356260>>மாணவி பாலியல் வன்கொடுமை<<>> செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக கனிமொழி கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் எனவும் கூறியுள்ளார். இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் TN-ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 12, 2026
இஸ்ரேலை அழிப்போம்: ஈரான்

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் ரஹீம் சஃபாவி, இஸ்ரேலை நிச்சயம் அழிப்போம் என்று சபதம் எடுத்துள்ளார். மத்திய கிழக்கில் இஸ்ரேலும் ஈரானும் ஒரே சமயத்தில் நிலைத்திருக்க சாத்தியமில்லை என்றும், இரண்டில் ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், டிரம்ப் மோசமான மற்றும் முட்டாள்தனமான அமெரிக்க அதிபர் என்றும் விமர்சித்தார்.


