News January 31, 2025
துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். பிப்.3ஆம் தேதிக்கு மேல் விண்ணப்பிக்கலாம் <
Similar News
News March 8, 2026
திருவள்ளூர்: மகளிருக்கு இந்த எண்கள் அவசியம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
கும்மிடிப்பூண்டி; இலங்கை தமிழர் முகாமில் படுகொலை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தலைவராக இருந்தவர் சிவகுமார் என்கின்ற கண்ணன்(42). நேற்று(மார்ச் 7) இரவு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பகுதியில் இருதரப்பு சமரசத்திற்கு சென்ற சிவகுமார் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 8, 2026
புழல்: கால்வாயில் இளம்பெண் சடலம்!

திருவள்ளூர்: புழல் அறிஞர் அண்ணா நகர் ரெட்டேரி கால்வாயில் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணையில், பிணமாக கிடந்தது சென்னை ராஜமங்கலம் மேற்கு தெருவைச் சேர்ந்த பழனி என்பவரது மகள் ஆசா கீர்த்தி(26) என்பதும், கடந்த மார்ச் 5ஆம் தேதி வீட்டில் மாயமானவர், வேலை கிடைக்காத விரக்தியில் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்தது.


