News January 31, 2025

கிராஜுவிட்டி என்றால் என்ன? யார் யாருக்கு கிடைக்கும்

image

கிராஜுவிட்டி என்பது நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவித்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் வெகுமதியாகும். வருமான வரி சட்டத்தின்படி, ஒருவர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்பட வேண்டும். ஊழியர் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 15 நாள் ஊதியம் என்ற அளவில் கணக்கிடப்பட்டு கிராஜுவிட்டி வழங்கப்படுகிறது.

Similar News

News March 6, 2026

கூட்டணி விஷயத்தில் ஸ்டாலின் அஞ்சினார்: TTV

image

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என TTV தெரிவித்துள்ளார். திமுக-காங்., கூட்டணியில் அடித்துக் கொண்டு தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்தது போல் NDA கூட்டணியில் நடக்காது; சுமுகமாகவே பேச்சுவார்த்தை முடியும் எனக் கூறினார். மேலும், தவெகவுடன் காங்., சென்றுவிடுமோ என அச்சத்தில் இருந்த ஸ்டாலின் பேச்சுவார்த்தை முடிந்தபிறகு சமிக்ஞை காட்டி நிம்மதியை வெளிப்படுத்தியதாகவும் பேசினார்.

News March 6, 2026

BREAKING: இரவில் அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு அமைப்புகளும், சங்கங்களும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை கட்சிகளிடம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கத்தின் நிறுவனப் பொ.செ., மருத்துவர் G. கருணாமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினர். அத்துடன், அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனவும் உறுதியளித்தனர்.

News March 6, 2026

விஜய்க்காக காத்திருக்கிறாரா EPS?

image

20+ கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை CM ஸ்டாலின் அமைத்துள்ளதால், தங்களது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என EPS எண்ணுகிறாராம். இந்நிலையில், தனித்து போட்டியிட்டால் தேர்தல் நேரத்தில் திமுகவின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என விஜய்க்கு அதிமுக தலைவர்கள் மூலம் EPS தூது அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும், அதிமுகவுடனான கூட்டணி குறித்து விஜய் நிறைய யோசிப்பதால், அவரது முடிவுக்காக EPS காத்திருக்கிறாராம்.

error: Content is protected !!