News March 27, 2024
அரை சதம் கடந்தார் டிராவிஸ் ஹெட்

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிய ஐதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். அதிரடியாக ஆடிய இவர் 3 சிக்ஸர், 9 பவுண்டரி (1 ஹாட்ரிக் பவுண்டரி) அடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் (18) அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது அதிரடியால் SRH அணி 9 ஓவர்கள் முடிவில் 128/2 ரன்கள் குவித்துள்ளது.
Similar News
News March 12, 2026
தோனி மீதான புகார் தள்ளுபடி

IPL-ல் வீரராக விளையாடும் நிலையில் கிரிக்கெட் அகாடமியையும் நடத்துவதால் BCCI விதிகளை மீறியதாக தோனி மீது 2024-ல் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த BCCI எதிக்ஸ் அதிகாரி நீதிபதி அருண் மிஸ்ரா, அகாடமியில் தோனி நிர்வாக அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று புகாரை தள்ளுபடி செய்துள்ளார். மேலும், அவர் BCCI விதிகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
சிலிண்டர் புக்கிங் பிரச்னையா? இப்படி டிரை பண்ணுங்க!

கேஸ் சிலிண்டர் புக்கிங் நம்பர் வேலை செய்யவில்லை என பலரும் புகார் கூறி வருகின்றனர். இதற்கு மாற்று வழியாக CRED, Paytm போன்ற தளங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடிகிறது. இந்த செயலிகளில் உள்ள போன் நம்பரும், சிலிண்டருக்கு பதிவு செய்திருக்கும் நம்பரும் ஒன்றாக இருந்தால் எளிதாக முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்திய பின்னரே புக் ஆகும் என்பதால், முன்பதிவு ஆனதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.
News March 12, 2026
BREAKING: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

எரிபொருள் கையிருப்பு போதுமான அளவு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளதால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் எரிபொருள் விநியோகம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசிய போர்ச்சூழலை எதிர்கொள்வோம் எனவும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


