News March 27, 2024
காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக இருவர் போட்டி

நெல்லையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக கடைசி நேரத்தில் இருவர் இன்று (மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் செய்தனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி ராமசுப்பு மற்றும் தேசிய நிர்வாகி வானமாமலை ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 9, 2025
நெல்லை : 12th PASS – ஆ…? அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: தமிழக அரசு
2. காலியிடங்கள்: 1429
3. கல்வித் தகுதி: 12th, + 2 ஆண்டு சுகாதார பணியாளர் படிப்பு சான்றிதழ்
4.சம்பளம்.ரூ.ரூ.19,500 – ரூ.71,900
5. கடைசி நாள்: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 9, 2025
நெல்லை: காட்டு யானைகளால் மக்கள் பீதி

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம். இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு குடியிருப்பு பகுதியில் சில நாள்களாக ஜோடியாக காட்டு யானைகள் நீண்ட நேரமாக சுற்றி திரிந்து வருகின்றன என்று பொதுமக்கள் கூறினர். மக்களை அச்சுறுத்திய காட்டு யானை இங்கு கொண்டு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
News November 9, 2025
நெல்லையில் காவலர் தேர்வை 4905 பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பாக இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி, பிஎஸ்என்எல் கல்லூரி, ராணியின் கல்லூரி ஆகிய மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நாளை நடைபெற உள்ளது. இதில் 3603 ஆண்டு ஆண்களும் 1302 பெண்களும் என மொத்தம் 4905 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.


