News January 31, 2025
எந்தெந்த பகுதியில் நாளை மின்தடை

மாத்தூர், குளத்தூர், விராலிமலை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.1) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், ஆவூர், ஒடுக்கூர், மாத்தூர், உப்பிலிக்குடி, குண்டூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரி உதவி செய்ய பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
புதுகை: பாலியல் தொல்லை அளித்தவருக்கு ஆயுள் தண்டனை

திருமயம் தாலுகாவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(39). இவர் 2023 இல் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் திருமயம் மகளிர் போலீஸார் போக்சோவில் சின்னச்சாமியை கைது செய்தனர். வழக்கை விசாரித்த புதுகை மகளிர் கோர்ட் நீதிபதி கனகராஜ் சின்னச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ 21ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News November 8, 2025
புதுகை: 12th போதும்.. வங்கி வேலை!

புதுகை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<
News November 8, 2025
புதுகை: பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து

புதுக்கோட்டை மச்சுவாடி சாலையில் ரேவதி (49) என்பவர் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் அரசு பேருந்து ஓட்டி வந்த பேருந்து ஓட்டுனர் சிவா (32) மோதியதில் ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


