News January 31, 2025
குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் ஓய்வு

குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த அவர், ஆசிய சாம்பியன்சிப் போட்டி, 2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றார். 2014இல் அர்ஜூனா விருது பெற தகுதி இருந்தும் அளிக்கப்படாததால் கோர்ட் சென்று அதை பெற்றார். ஓய்வு அறிவித்துள்ள மனோஜ், பயிற்சியாளராக செயல்பட போவதாக கூறியுள்ளார்.
Similar News
News March 7, 2026
நகைக்கடன் தள்ளுபடி .. வெளியான மகிழ்ச்சி செய்தி

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பெண்களை கவரும் வகையில், மகளிர் தினத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை விஜய் வெளியிடுகிறார். நாளை திமுகவும், அதிமுகவும் பெண்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது
News March 7, 2026
திமுக டெபாசிட்டை இழக்கும்: ராஜேந்திர பாலாஜி

திமுக தங்களது கூட்டணியில் 50 கட்சிகளை இணைத்தாலும், அனைத்து இடங்களில் டெபாசிட்டை இழக்கும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அண்ணா உருவாக்கிய திமுகவை ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிவிட்டார் என விமர்சித்த அவர், எங்களை எதிர்க்கும் துணிச்சல் திமுக கூட்டணிக்கு கிடையாது என்றார். மேலும், நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது; எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது எனவும் தெரிவித்தார்.
News March 7, 2026
காங்.,காக மக்கள் நலனை அடகு வைத்த திமுக: அண்ணாமலை

TN உரிமையை காக்காமல், கர்நாடக அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது, TN மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் என விமர்சனம் செய்துள்ள அவர், காங்கிரஸுடன் கூட்டணியை உறுதி செய்த மறுநாளே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வருவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.


