News March 27, 2024
தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை

சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, 31-சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்கு பொது தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஹரிஷ் இன்று (27.03.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆஷா அஜித் அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Similar News
News February 10, 2026
பல்வேறு பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்கள், உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சிகளை பெறுவதற்கு www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
சிவகங்கை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04575-240524 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News February 10, 2026
சிவகங்கை: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

மானாமதுரை, கல்லல் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மானாமதுரை, SIPCOT, இராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, கல்லல், சிறுவயல், குருந்தம்பட்டு, குறிச்சி, மாலைகண்டான், வெற்றியூர், சாத்தரசம்பட்டி, செம்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


