News March 27, 2024
குன்றத்தூர் அருகே நிவாரண பொருட்கள் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரது குடிசை வீடு நேற்று திடீரென தீப்பற்றி வீடு எரிந்து சாம்பலானது. இதையடுத்து இன்று மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் பாதிப்படைந்த செல்வி வீட்டிற்கு நேரில் சென்று நிவாரண உதவியாக மளிகை பொருட்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
Similar News
News February 19, 2026
காஞ்சிபுரத்தில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 19, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தல்!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக பறவை இறந்து கிடந்தது. பறவை காய்ச்சலால் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகேம் கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று(பிப்.19) மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, இறந்த பறவைகளை தாங்களாகவே அப்புறப்படுத்தாமல், கால்நடை மருத்துவ துறைக்கு தெரியப்படுத்தவும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
News February 19, 2026
காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

ஒரகடம் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், பண்ருட்டி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போதை வஸ்துக்கள் கொரியர் மூலம் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனை செய்ததில், 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தூத்துக்குடியைச் சேர்ந்த துரைசெல்வன்(27) என்பவரை கைது செய்தனர்.


