News March 27, 2024

சர்ச்சையில் சிக்கிய டி.எம்.செல்வகணபதி

image

சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்குரிமை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதிச் செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 17,18 படி கிரிமினல் குற்றம் ஆகும். மேலும் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 7, 2025

BREAKING: சேலத்தில் சுட்டுப் பிடித்த போலீஸ்!

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ஒரு கல்குவாரியில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 2 மூதாட்டிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில், இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கூலித் தொழிலாளிகளான பாவாயி மற்றும் பெரியம்மாள் ஆகியோரை கொலை செய்து, அவர்களது நகைகளை திருடிய அய்யனார் என்பவரை, காவல்துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

News November 7, 2025

சேலம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

சேலம் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 7, 2025

வாழப்பாடி அருகே அண்ணனை கொன்ற தம்பி!

image

வாழப்பாடி அருகே சேஷன்சாவடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது தம்பி ஆறுமுகம் (45). கடந்த 28ஆம் தேதி இவர்களது வீடு தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், உருட்டுக்கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில், அண்ணனை கொலை செய்த ஆறுமுகத்தை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!