News January 30, 2025
பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நபார்டு வங்கி சார்பில், ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் காவிரி, டெல்டா பகுதியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஏற்படுத்துதல் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற திருவாரூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு முன்பதிவு செய்ய 7010155955 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE NOW !
Similar News
News July 9, 2025
திருவாரூர்: ஆற்றில் மூழ்கிய கூலி தொழிலாளியின் உடல் மீட்பு

கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முகமது ஹனிபா (56). இவர், நேற்று முன்தினம் பாய்க்காரத் தெரு பாலம் அருகில் உள்ள வெண்ணாற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது, ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி மாயமானார். இதனை அடுத்து கூத்தாநல்லூர் தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து, நேற்று முன்தினம் முதல் தேடும் பணியில் ஈடுபட்டு, நேற்று மாலை முகமது ஹனிபாவின் உடலை மீட்டனர்.
News July 9, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய ரோந்து பணி காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 8 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை. இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல்துறையின் உடனடி உதவிக்கு எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News July 8, 2025
திருவாரூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. <